அமெரிக்க வரலாற்றில் புரோகிராமிங் கற்ற முதல் அதிபர் ஒபாமா !!

அமெரிக்க வரலாற்றில் புரோகிராமிங் கற்ற முதல் அதிபர் எனும் சிறப்பையும் ஒபாமா பெற்றிருக்கிறார்.new-Gif ஒபாமாவுக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங் மீது ஏற்பட்ட இந்த திடீர் ஆர்வத்திற்கு அழகான காரணம் இருக்கிறது. கோட்.ஆர்ஜி எனும் அமைப்புதான் இதற்கு காரணம். இந்த அமைப்புதான் அதிபர் ஒபாமாவை பிடித்து இழுத்து வந்து ஒரு வரியாவது கோட் எழுத கற்றுக்கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்தியிருக்கிறது. அதிபரும் இதை அன்பு கட்டளையாக ஏற்று கோட் எழுதி புரோகிரமாகி இருக்கிறார்.

ஒபாமாவை கம்ப்யூட்டர் புரோகிராமர் என்று சொல்வது கொஞ்சம் மிகைதான். அதிபர் உண்மையில் புரோகிராமிங் கற்பதற்கு தேவையான அரிச்சுவடியை கற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் அதிபரின் நோக்கம் தான் கம்ப்யூட்டரில் சூரப்புலியாக வேண்டும் என்பதல்ல; மாறாக மாணவர்கள் ,கம்ப்யூட்டர் புரோகிராமிங் திறனை பெற வேண்டும் எனும் விருப்பத்தில்தான் அவரே கோடிங்கில் களமிறங்கி காட்டியிருக்கிறார். எதற்கும் ஒரு வலுவான முன்னுதாரணம் வேண்டும் அல்லவா? அதனால் தான் அவர் கோட்.ஆர்ஜி அமைப்புடன் கைகோர்த்து செயல்பட முன்வந்திருக்கிறார்.

இந்த அமைப்பு கோடிங் என்று சொல்லப்படும் கம்யூட்டர் புரோகிராமிங்கிற்கான அடிப்படை திறனில் அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் கம்ப்யூட்டரில் கோட் எழுத கற்றுக்கொள்ளலாம் எனும் நம்பிக்கையில் அடிப்படையில் செயல்பட்டு வரும் இந்த லாபநோக்கில்லாத அமைப்பு, இந்த நம்பிக்கையை அனைவரிடமும் விதைப்பதற்காக ஹவர் ஆப் கோட் எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கம்ப்யூட்டர் கோட் அடிப்படைகளை கற்க வைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் ஹவர் ஆப் கோட் மூலம் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கிற்கான அரிச்சுவடும் அடிப்படை அம்சங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு மாணவருக்கும் கோடிங் கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை இந்த அமைப்பு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒரு மணி நேரம் மாணவர்களை கம்ப்யூட்டர் முன் அமர்த்தி புரோகிராமிங் அடிப்படைகளை சொல்லித்தந்து அவர்களுக்கு வருங்காலத்தில் புரோகிராமிங் மீது ஆர்வத்தை தூண்டிவிட இதன் மூலம் முயற்சிக்கப்படுகிறது.

அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகம் தழுவிய அளவில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு ஹவர் ஆப் கோட் நிகழ்ச்சியில் 53 மில்லியன் மாணவர்கள் பங்கு பெற்றனர். இந்த ஆண்டுக்கான ஹவர் ஆப் கோட் நிகழ்ச்சி தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100 மில்லியன் மாணவர்களை சென்றடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே , அமெரிக்க அதிபர் ஒபாமாவை கோடிங் கற்க வைத்து, புரோகிராமிங் மீது அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த முயனறுள்ளது. ஒபாமாவும் இதை ஏற்று ஜாவா ஸ்கிரிப்பில் அரிச்சுவடு கற்று, ஒரு வரி கோட் எழுதியுள்ளார்.

எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை உறுதி செய்து கொள்ள கம்ப்யூட்டர் புரோகிராமிங் திறன் எல்லா துறையினருக்குமே அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தர கோட்.ஆர்ஜி முயன்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதன் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

pp--full

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*