பாப்பரசரை கௌரவப்படுத்தும் நோக்கில் கைதிகள் விடுதலை:சிறைச்சாலைகள் திணைக்களம்

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்புnew-Gif  வழங்கப்படவுள்ளது.எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த நிலையில் நோய்வாய்ப்பட்டவர்கள், நல்லொழுக்கமானவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் வழிகாட்டல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட உள்ளது.

பாப்பரசரை கௌரவப்படுத்தும் நோக்கில் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*