மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் நிலை மகிந்தர் மீது கொண்ட வெறுப்பு தான் காரணம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் 5 நாடாளுமன்ற new-Gif உறுப்பினர்கள் இந்த வாரத்தில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வெளியிடுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் சில அமைச்சர்களும் அடங்குகின்றனர் என்பதுதான் மேலும் அதிர்சி தரும் தகவலாக உள்ளது. இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி தமது ஆதரவை மைத்திரிபாலவுக்கு வழங்கவுள்ளனர். இதற்கிடையில் மற்றும் ஒரு அரசாங்கத் தரப்பினர் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ள போதும் பல காரணங்களால் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது சரி தற்போது ஆட்சியில் உள்ள மகிந்தர் அரசில், அமைச்சர்கள் பதவி வகிக்கும் நபர்கள் கூட ஏன் கட்சியை விட்டு தாவுகிறார்கள் என்று பலரும் யோசித்து இருக்க முடியும். அமைச்சுப் பதவியில் இருந்தால் நல்லது தானே என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால் சிலர் நடக்க இருப்பதை முன் கூட்டியே அனுமானித்து விடுகிறார்கள். மைத்திரிபால சிலவேளை வென்றால், அவர் உடனடியாக தற்போது ஆட்சியில் இருக்கும் அரசைக் கலைத்து, மீண்டும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவார். அதில் ரணில் வென்றால் , மகிந்த பக்கம் இருப்பதில் என்ன லாபம் என்பது தான் இந்த அமைச்சர்களின் கருத்து. இது இவ்வாறு இருக்க, மகிந்தர் மீது கொண்ட வெறுப்பு காரணமாகவும் பல மூத்த அமைச்சர்கள் கட்சி மாறுகிறார்கள்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், 20 வருடங்களுக்கு மேலாக மகிந்தர் கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் தற்பொழுது கூட அப்படியே தான் இருக்கிறார்கள். ஆனால் மகிந்தரின் மகன், சித்தப்பா , சித்தி, மாமா மாமி எல்லாருமே பெரும் பொறுப்பில் இருக்கிறார்கள். இதனைப் பார்த்தால் எந்த கட்சி உறுப்பினருக்கு தான் கோபம் வராது சொல்லுங்கள் ? முதலில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றே இவர்கள் கருதுகிறார்கள். இது மக்களுக்கு விளங்குமா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*