மண்ணெண்ணை ஒதுக்கீடு:பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் பன்னீர் செல்வம் கடிதம்

பொதுவிநியோகத் திட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்படும் மண்ணெண்ணையை மத்திய அரசு நிறுத்தப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், new-Gifஇந்தத் திட்டத்தைத் தொடர வேண்டுமெனக் கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னமும் மண்ணெண்ணைதான் முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் சில இடங்களில் கூடுதல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புறப் பகுதிகளில் எரிவாயு இணைப்புப் பெற்றவர்களில் ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருப்பவர்கள், கூடுதல் எரிபொருளாக மண்ணெண்ணையையே பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் மண்ணெண்ணை ஒதுக்கீடு செய்யவில்லையென்றால், மரங்களை எரித்து சமைப்பது அதிகரிக்கும் என்றும் சுத்தமாக மண்ணெண்ணை வழங்குவதை நிறுத்திவிட்டால், அது மிகப் பெரிய சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதேபோல, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்குப் பதிலாக, பணத்தை வழங்குவதை தமிழகம் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல, தமிழகத்திற்கு ஒவ்வொரு மாதமும் தேவைப்படும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணையை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*