இந்திய மீனவர்கள் 38 பேரும் தம்மை விடுவிக்கக் கோரி நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 38 பேரும் தம்மை விடுவிக்கக்new-Gif  கோரி நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என யாழ். இந்திய துணைத்தூதரக பிரதித் துணைத்தூதுவர் எஸ். டி தட்சணாமூர்த்தி தெரிவித்தார்.
இலங்கைக்கடல் எல்லையை தாண்டினர் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகம் இராமேஸ்வரம் , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்  யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்லை தாண்டினர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு தடவைகள் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேர் யாழ். சிறையில் நீதிமன்ற உத்தரவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை விடுதலை செய்யுமாறு கோரி நேற்று முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளேன்.
அதேபோல டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளேன். மிகவிரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன் என்றார்.
இது தொடர்பில் யாழ். சிறைச்சாலையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
ஊடகங்களுக்கு அனுமதியின்றி தகவல்கள் வழங்கக் கூடாது என தலைமை அலுவலக கட்டளை எனவே அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
அதனையடுத்து தலைமையகத்துடன்  தொடர்பு கொண்டு கேட்ட போது , இந்திய மீனவர்களது போராட்டம் என எதுவும் நடைபெறவில்லை என்றும் துணைத்தூதரகத்தினர் கூறுவது பொய்யான தகவல் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*