பொம்மைவெளி பிரதேச மக்கள் மீது பொலிசார் அடிதடி பிரயோகம் மற்றும் கற்களை வீசி தாக்குதல்

new-Gifசொந்தக் காணி வழங்குமாறு வலியுறுத்தி வீதியினை மறித்து போராட்டம் நடத்திய பொம்மைவெளி பிரதேச மக்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சொந்தக் காணி வழங்குமாறு வலியுறுத்தி குறித்த பிரதேச மக்கள் பொம்மைவெளி சந்தியில் இன்று காலை வீதியினை மறித்து, தகரக்கொட்டகைகளை அமைத்து   போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்ம் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலரை அமைச்சருடன் கதைப்பதற்கு தமது  அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

போராட்டக்கரர்களில் சிலர் அவர்களை நம்பி அங்கு சென்றிருந்தனர். இருப்பினும் அமைச்சர் அவர்களை சந்திக்கவில்லை. மாறாக மாலை உங்கள் பிரதேசத்திற்கு அமைச்சர் வந்து சந்திப்பார் என அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் போராட்ட இடத்திற்கு வந்த யாழ்ப்பாணம் பொலிசார் அங்கு அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகைகளை  காலால் உதைந்து தள்ளி விழுத்தியதுடன் போராட்டகாரர்கள் மீது அடிதடி பிரயோகம் மற்றும் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் வயது முதிர்ந்த பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். மேலும் பொலிசார் போராட்டகாரர்களை பார்த்து தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

 

pp--full

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*