ஆளும் தரப்பின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்போது போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது:மாவை. சேனாதிராஜா

ஆளும் தரப்பின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்போது போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. new-Gifஇப்போராட்டத்தில் நாம் வெற்றிபெறுவதற்கு எங்களுடைய கலை, கலாசரம், மொழி என்பன பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கருத்து தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஆளுவோருடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக எங்களுடைய சமுதாயம் இன்று போராடிக்கொண்டிருக்கின்றது. இப்போராட்டத்தில் நாம் வெற்றிபெறுவதற்கு எங்களுடைய கலை, கலாசரம், மொழி என்பன பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்.

அந்த மொழியைப் பேணுகின்ற சமுதாயம் தங்களுடைய இனம் தமிழினம் என்று செல்லப்படுகின்ற வார்த்தைகளை, அந்த உறுதிப்பாட்டை எதிர்காலத்திலும் கட்டியெழுப்ப வேண்டும்.

எங்களுடைய சிறுவர்கள், எதிர்கால சந்ததியினர் நாங்கள் தமிழர்கள் என்று மார்தட்டிக் கொள்வதற்கு அதுதான் அடித்தளமாக அமையும். இதுவே எமது கடமையாகும் என்றார்.

pp--full

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*