ஜனதிபதி பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பணத்தை அநியாயமாக செலவு செய்யும் ஒரு நடவடிக்கை

M-FULL

இலங்கையில் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அரசாங்க new-Gifஅமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடகங்களில் விளம்பரங்களின் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறும் நடவடிக்கையானது பொதுமக்கள் பணத்தை விரயம் செய்யும் நடவடிக்கையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல ஊடகங்களில் அரசாங்க நிறுவங்களின் வாழ்த்து விளம்பரங்கள் வெளியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறும் நிலையிலேயே இந்த விமர்சனமும் கிளம்பியுள்ளது.

பொதுமக்கள் பணத்தை அநியாயமாக செலவு செய்யும் ஒரு நடவடிக்கை என்று இதனை வர்ணிக்கும் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என். வித்தியாதரன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காரணமாகவே இந்தக் கலாச்சாரம் வளர்ந்துள்ளதாக விமர்சிக்கிறார்.

இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள அரசியல் சூழலில் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.

pp--full

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*