பிரான்ஸ் டிஸ்னிலாண்ட்க்குள் ஒருவர் துப்பாக்கியுடன் உள் நுழைந்துள்ளாா்

800x150-GIF-01FULLபிரான்சின் மீதான பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும்  இந்த வேளையில்new-Gif டிஸ்னிலாண்ட்க்குள்  ஒருவர்  துப்பாக்கியுடன் உள் நுழைந்துள்ளாா்.

இது பற்றி அறிய வருவதாவது

இன்று மாலை 18.00  மணியளவில் துப்பாக்கியுடன் டிஸ்னிலாண்ட் வாகனத் தரிப்பிடத்திற்குள் நுழைந்த நபர் ஒருவரை அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் கண்டு விட்டு  காவற்துறையினரிற்கு தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்தனா். அந்த நபரை  சோதனை செய்த போது அவரிடம்  இருந்த துப்பாக்கி போலி யானது என கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரித்த போது தான் துருக்கியைச் சேர்ந்தவர் எனவும் பரபரப்பை ஏற்படுத்தவே தான் இப்படிச் செய்ததாக தெரிவித்தார். இவருடன் வந்திருந்த இன்னுமொருவரும் பெல்ஜியத்தில் வசிக்கும் துருக்கியைச் சேர்ந்தவராவார். இருவரும் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*