ஐ.நா.வின் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வன்னியில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிப்பு

800x150-GIF-01FULLஇலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புத் தொடர்பான ஐ.நா.வின் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளnew-Gif நிலையில் வன்னியில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளிலும் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவுப் பகுதிகளிலும் இராணுவக் கெடுபிடி அதிகரித்துள்ளது.

வன்னியில் இராணுவத்தின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் உடையில் சுற்றித்திரிகின்ற இராணுவப் புலனாய்வாளர்கள், ஐ.நா. விசாரணைக்குழுவிடம் சாட்சியங்களைப் பதிவுசெய்யக் கூடாது என பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அச்சுறுத்தியும் வருகின்றனர்.

இதேவேளை முன்னாள் போராளிகளை அழைக்கின்ற இராணுவம் அவர்களிடம் சாட்சியங்களைப் பதிவுசெய்தால் மீண்டும் கைதுசெய்யப்படுவீர்கள் எனத் தெரிவிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கிழமை ஐ.நா. விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருத்தவர் என்ற குற்றச்சாட்டில் ஆறு பிள்ளைகளின் தந்தை கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*