மினிபஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

முன்னால் சென்ற இ.போ.ச. பஸ்ஸை முந்துவதற்காக துரத்திச் சென்ற மினிபஸ் வேகக் கட்டுப்பாட்டை new-Gifஇழந்ததுடன் சைக்கிளில் சென்ற குறித்த நபரை மோதித்தள்ளியதிலே இவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணியளவில் கோம்பயன் மணல் மயானச் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சங்கானையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து  குடும்பஸ்தரை மோதித் தள்ளியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி இச்சம்பவத்தில் நாவாந்துறையைச் சேர்ந்த கந்தையா நிக்சன் (வயது 40) மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.
மேலும் இந்த விபத்துடன் சம்பந்தப்பட்ட மினி பஸ் சாரதி சுன்னாகம் பொலிஸில் சரணடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விபத்துச் சம்பவத்தின் பின்னர் குறித்த பகுதி மிகவும் கலவரமாக காணப்பட்டது.இந்தக் கலவரத்தை அடக்க குறித்த இடத்தில் படையினரும்,பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தக் கலவரத்தில் சிவிலில் நின்ற பொலிஸாரால் ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
 மேலும்  இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*