டிசம்பரில் வெளிவருகின்றது லிங்கா:இயக்குனர் ரவிக்குமார்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் “லி்ங்கா” படம் ரூ.200 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது.new-Gif இந்த படத்தின் படப்பிடிப்பு மண்டியாவில் அதிகமாக நடைபெற்றது. அந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து லிங்கா படத்தின் படப்பிடிப்பு பணிகள் மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கபட்டணம், மேல்கோட்டை, கரிகட்டா உள்ளிட்ட இடங்களிலும், மைசூர் அரண்மனையிலும் 9 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம், 8 ஆண்டுகளுக்கு முன் மண்டியா மாவட்டத்தில் படமாக்கப்பட்டது. மேலும் அவரது பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் மண்டியா மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். அதேபோல லிங்கா படத்தின் காட்சிகளும் மண்டியா-மைசூர் மாவட்டங்களில் நடந்தது. படப்பிடிப்பு நடைபெறும் 9 நாட்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டனர்.

படத்தில் ஒரு ரஜினிக்கு ஜோடியாக சோனக்ஷியும், இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடிக்கின்றனர். காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சூப்பர் ஸ்டார் நடிக்கும் லிங்கா படம் முடியும் தருவாயில் உள்ளது. ஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக ரஜினியுடன் அனுஷ்கா மற்றும் சேனாக்ஷி சின்காவும் செல்ல இருக்கின்றார்கள். இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத இடமாகவும் பிரமிப்படையும் சூழலையும் கொண்டதாகவும் அமைய இருக்கும் என சொல்லப்படுகின்றது.

இதை பற்றி இயக்குனர் ரவிக்குமார் ரஜினி ரசிகர்களுக்கு இதை தெரிவித்தார்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*