வெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கு மாகாணத்திற்கு பயணம் செய்வது தொடர்பில் பல நாடுகள் அதிருப்தி

வெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கு மாகாணத்திற்கு பயணம் செய்வது தொடர்பில் காணப்படும்new-Gif கெடுபிடிகள் குறித்து பல நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டன இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை விஜயம் தொடர்பில் பல நாடுகள் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. அத்தியாவசியமில்லை என்றால் இலங்கையின் சில பகுதிகளுக்கான விஜயங்களை தவிர்த்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டுக் கடவுச் சீட்டு உடையவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனை குறித்து பல நாடுகள் தமது நாட்டு பிரஜைகள்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கைக்கான பயணங்களின் போதும் குறிப்பாக நாட்டின் ஒரு சில பகுதிகளுக்கான பயணங்களின் போதும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*