எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அதிர்ச்சி வைத்தியம்

வரவு செலவுத் திட்ட உரையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிnew-Gif நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுப்படித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் அண்மைக்காலமாக ஜனாதிபதி மஹிந்தவை பய்யா (பட்டிக்காட்டான்) என்ற பட்டப் பெயரில் ஏளனமாக அழைத்து வருகின்றனர். ஒரு சில இணையத்தள ஊடகவியலாளர்கள் ஒரு படி மேலே சென்று தமது செய்தியறிக்கைகளிலும் பய்யா என்றே ஜனாதிபதியை விளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வரவு-செலவுத்திட்ட உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். நாடாளுமன்ற அமர்வு முடிந்து ஜனாதிபதி வெளியே வந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர் முன்னால் எதிர்ப்பட்டனர்.

அவர்களைப் பார்த்தவுடன் புன்முறுவல் பூத்த ஜனாதிபதி , “பட்டிக்காட்டானின் பட்ஜெட் எப்படி? ” என்று கேட்டு கடுப்படித்தார். திகைத்துப் போன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புன்முறுவலுடன் அங்கிருந்து மெல்ல நகர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*