ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிக்கு அனுமதி மறுப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரியொருவர் வடக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் new-Gifதெரிவிக்கப்படுகிறது.

ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் குறித்த அதிகாரியை தடுத்து நிறுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

உலக உணவு தினம் தொடர்பிலான நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கிளிநொச்சி பயணம் செய்த முற்பட்ட போது இராணுத்தினர் தடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதிநிதி க்ராவ்பொட் பெட்த்தே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

முன்னாள் யுத்த வலயத்திற்குள் பிரவேசிக்க முடியாது என இராணுவத்தினர் குறித்த அதிகாரியை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளிநாட்டவர்கள் அனுமதியின்றி வடக்கு செல்ல முடியாது என அறிவித்ததன் பின்னர் இவ்வாறு ஐக்கிய நாடுகள் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பிரதம அதிதியாக பெட்த் பங்கேற்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினர் குறித்த அதிகாரியை தடுத்து நிறுத்தியமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*