பாரிஸ் 4ம் நம்பர்(metro) தொடருந்தில் கைது செய்யப்பட்ட தமிழர் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார்

பாரிஸ் 4ம் நம்பர்(metro) தொடருந்தில் கைது செய்யப்பட்ட தமிழர் இலங்கை அனுப்பி new-Gifவைக்கப்பட்டார்.

பாபு  என்பவர் பாரிஸில் வசித்து வந்தார்.  இவர் 2008 ஆண்டு பிரான்ஸில் அகதி தஞ்சம்  வதிவிட விசா  நிராகரிக்கப்பட்டு இருந்தார். இவர் மீண்டும்   அகதி தஞ்ச விசா விற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை  பின்னர் இவர் பிரான்ஸ்  நிரந்தர  விசா உரிமையை  பெற்ற  பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரை உறுதிப்படுத்த கூடியவாறு  எந்த திருமணப் பத்திரத்தையும் வைத்திருக்கவில்லை காரணம் இவர்கள் எந்த பதிவும் செய்யவில்லை. இவர் 15.10.2014 அன்று  போர்த்துகிளிஞ்சான் கோட்டில்  (porte De Cilgnancourt) தொடருந்து நிலையத்தில் ரிக்கற் எடுக்காமல் சென்றுள்ளார் ( இது தான் முதலில் தப்பு) இவரை பார்த்த தொடருந்து காவல்துறையினர் மறித்து தொடருந்த அனுமதி ரிக்கற்ரை கேட்டனர் இவர் இல்லை என்றும்  மன்னிப்பு கோராமல் சண்டை பிடித்துள்ளார் .

பின்னர் தொடருந்து காவல் துறையினர் தேசிய காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல் துறையினர் இவரை முதலில் விசாரணைக்கு உட்படுத்தினர். இவருக்கு எந்த விசாவும் இல்லை என்பதனை உறுதிப்படுத்திய காவல்துறையினர் இவரை கைது செய்து 2 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு  பின்னர் இலங்கைக்கு அனுப்பிவைக்ப்பட்டார்.

இவருடைய மனைவி வழக்கறினரை தொடர்பு படுத்தி காவல் துறையினரை கேட்ட போது காவல்துறையினால் இவர் சட்டத்திற்கு புறம்பாக பிரான்ஸ்ஸில்  வசித்து வந்தார்.இவர் சட்டபூர்வமாக  எந்த விசாவையும் வைத்திருக்கவில்லை. திருமண சான்றிதழ்களையும் வைத்திருக்கவில்லை மனைவி ஆகிய நீங்கள் இலங்கைக்கு சென்று சட்டபூர்வமாக அவரை திருமணம் செய்து பிரான்ஸிற்கு அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவர் போன்ற எத்தனையோ தமிழர்கள் பிரான்ஸில் விசா உரிமை பெறாமல் வசித்து வருகின்றனர் தயவு செய்து விசா பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அவசரமாக செய்து கொள்ளுங்கள் இது தான் பிரான்ஸின்  தேசிய பாதுகாப்பிற்கு உதவி புரிதாலாக இருக்கும்.

இலங்கை அனுப்பி வைக்கப்பவோரை  பிரான்ஸ் நிறுவனம் ஒன்று (பெயர் தெரியவில்லை ) அவர்கள் பொறுப்பெடுத்து இரண்டு நாட்களின் பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*