லூட்ஸ்சில் இருந்து பாரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த தொடருந்தில் போ என்ற இடத்தில் சில தமிழர் கைது

கடந்த புதன்கிழமை தொடருந்தில் தேசிய பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது new-Gifவிசா இல்லாத 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள்  2008ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் புகலிட தஞ்சம்  கோரினார்கள். இவர்களது தஞசக் கோரிக்கை  மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தனர். கடந்த புதன்கிழமை லூட்ஸ்சில் இருந்து பாரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள்   பிரான்ஸ் -ஸ்பெயின் எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பல நாட்டவர்களும், இந்தியர் ஒருவரும் உள்ளனர். இவர்கள் தமது நண்பர்களின் உதவியை நாடி வழக்கறிஞர் உதவியை நாடியுள்ளனர்.

தேசிய வதிவிட விசா உரிமை பெறாத தமிழ் மக்கள் உரிய நடவடிக்கை மேற் கொள்ளவும். பிரான்ஸ் நாட்டின் தேசிய நலனிற்கு பங்கம் விளைவிக்க வேண்டாம் எ ன்று கேட்டுக் கொள்கின்றோம்.

கைது செய்யப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாமின் தொலைபேசி இலக்கம் 00320559207032 இது உறுதிப்படுத்தப்பட்ட  தகவல்

இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும்  நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவணம் செலுத்தவேண்டும் என்பதுக்காகவே இணைக்கப்படுகின்றன  பல லட்சம் ரூபாய்களை கட்டி உயிரை காப்பாற்ற வேளிநாடு வந்து விசா மறுக்கப்பட்டு இலங்கை திருப்பி அனுப்பினால் என்ன பயன் நாங்கள் 4 ம் மாடியிலா வாழ்க்கை நடத்துறது என்று  பலறும் புலம்புகிறார்கள். இதுக்காகவே நாங்களும் இரவு பகலாக பாடுபடுகின்றோம்!!!!

2

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*