பாரிஸில் தொடருந்து நிலையங்களில் மூன்று நாட்களில் பலர் கைது

பாரிஸில் தொடருந்து  நிலையங்களில் மூன்று நாட்களில் பல நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக new-Gifதகவல்கள் தெரிவிக்கின்றன. வேலைப்பழு கூடிய இடமான பாரிஸில்  நாள் ஒன்றுக்கு இரண்டு முறைகள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள வேலையாட்களில் தமிழரும் பெரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.

இரவு வேளைகளில் வேலையை முடித்துக்கொண்டு  வீடு செல்வதற்காக தொடருந்து நிலையத்திற்கு வரும் சிலர் தள்ளாடி வருவது வழக்கம்  இதன் போது  பல நாட்டு பயணிகளிடம் சண்டை வருவதும், காவல் துறையினரைக் கண்டவுடன் ஓடுவதும் நடைமுறையாக இருந்து வந்தது. இப்போது  விசா இல்லாமல் வேலைக்கு செல்பவர்கள் பலத்த சிரமத்தின்  மத்தியில் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மிகவும் பிரபல்யமான தொடருந்து நிலையங்களில் காவற்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவது காணக்கூடியதாக உள்ளது. பிரான்ஸ் நாட்டினுடைய தேசிய ஒருமைப்பாட்டிலும்  இறையாண்மையையும் சட்டத்தையும் எவர் மீறினாலும் அது சட்டத்திற்கு புறம்பானதே ஆகும்.

தமிழர்களாகிய நாங்கள்  இந்த நாட்டினுடைய சட்டதிட்டங்களை மதித்து நடப்பதே சிறந்ததொன்றாகும்.

paris 01 paris 02 French-police-do-security-006

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*