ஜெனீவாவில் இலங்கை குறித்தும் தீர்ப்பளிப்பதோ அல்லது ஒப்பீடு செய்வதோ தனது கடமையல்ல:நைஜல் ரொட்லி

ஐ.நா மனித உரிமை குழு இலங்கை குறித்து தீர்ப்புகள் எதனையும் வழங்க முயலவில்லை என new-Gifதெரிவித்துள்ள அதன் தலைவர் நைஜல் ரொட்லி உலகின் எந்த நாடு குறித்தும் தீர்ப்பளிப்பதோ அல்லது ஒப்பீடு செய்வதோ தனது கடமையல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடினமான மோதல் நடைபெற்றது என்பது எமக்கு தெரியும் எனினும் தண்டனையிலிருந்து விலக்களித்தல் உட்பட பல கரிசனைகள் இலங்கை குறித்து காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை குறித்த ஆய்வின் முடிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசி;ன்ஹ முன்னதாக உரையாற்றுகையில் இலங்கை குறித்து குறிப்பிட்ட குழு தீர்ப்பளிக்க முயல்வதுபோல தனக்கு தோன்றுவதாக குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக காணமற்போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து இந்த போக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*