இலங்கை அர­சாங்­கத்திற்கெதிராக இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் இணைந்து சதி!

இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் இணைந்து இலங்கை அர­சாங்­கத்தின் சில பங்­கா­ளி­க­ளையும் தமிழ் தேசியக்new-Gif கூட்­ட­மைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸையும் இணைத்­துக்­கொண்டு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு சதித்­திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­வ­தாக குற்­றம்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார ஜனா­தி­பதித் தேர்­தலில் நூற்­றுக்கு 51 வீத வாக்­குகள் கிடைப்­பதை தடுக்க கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் முயற்­சிப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்;

இலங்­கை­யி­லுள்ள சிறு சிறு கட்­சி­களை தமது பக்கம் இழுத்­துக்­கொண்­டுள்­ள­தோடு தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸையும் பயன்­ப­டுத்தி அத்­தோடு அர­சி­லுள்ள சில அதி­காரப் பர­வ­லாக்­கலை ஆத­ரிப்­போ­ரையும் இந்­தி­யா­வையும் அமெ­ரிக்­கா­வையும் இணைத்­துக்­கொண்டு எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­தவை தோல்­வி­ய­டை­யச்­செய்து அரசை கவிழ்க்க சதித்­திட்டம் தீட்­டு­கின்­றது.

இதன் ஒரு கட்­டம்தான் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் இடையே நடக்­கப்­போகும் பேச்­சு­வார்த்­தை­யாகும். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இந்த இரண்டு தமிழ்இ முஸ்லிம் இன­வாதக் கூட்டு இன அடிப்­ப­டையில் வாக்­கு­களை சிதற செய்து மஹிந்­த­வுக்கு நூற்­றுக்கு 51 வீத வாக்­கு­களை கிடைக்­காமல் செய்து பேரம் பேசும் பலத்தை தமது கையி­லெ­டுத்துக் கொண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவை வழங்கும். இதன்­போது சிறு சிறு கட்­சி­களும் அர­சி­லுள்ள அதி­காரப் பர­வ­லாக்­கலை ஆத­ரிக்கும் குழு­வி­னரும் இதே நிலைப்­பாட்டை எடுக்கும்.

அதே­வேளைஇ 3ஆவது தட­வை­யாக ஜனா­தி­ப­திக்கு போட்­டி­யிட முடி­யாது என்ற ஒரு கருத்தை எதிர்க்­கட்­சி­யினர் இப்­போ­தி­ருந்தே ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். இதன்­மூலம் ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­த­வென்றால் அவ்­வெற்றி திருட்­டுத்­த­ன­மாக பெறப்­பட்­டது என பிர­சாரம் செய்­வ­தற்கும் பயன்­ப­டுத்­த­வுள்­ளது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*