மாதகல் துறையில் படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.730 கிலோகிராம் தங்கத்தை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மாதகல் துறையில் படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.730 கிலோகிராம் தங்கத்தை new-Gifகடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகில் வலைக்குள் மறைத்து வைக்ப்பட்டிருந்த 8 தங்க பிஸ்கெட்கள், 4 சிறு தங்கத் துண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தங்கம் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கைப்பற்றப்பட்ட தங்கம் சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*