மராத்தான் போட்டியில் கென்யா நாட்டின் டென்னிஸ் கிமெட்டோ உலக சாதனையை முறியடித்தார்.

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் இன்று நடந்த மராத்தான் போட்டியில் கென்யா நாட்டின்new-Gif டென்னிஸ் கிமெட்டோ உலக சாதனையை முறியடித்தார்.  கடந்த ஆண்டு நடந்த மராத்தான் போட்டியில் பந்தய தூரத்தை 2:03:23 மணி நேரத்தில் கடந்து வில்சன் கிப்சங் சாதனை படைத்திருந்தார்.

உலக சாதனை முறியடிப்பு

இந்நிலையில் கிமெட்டோ 2 மணி 02 நிமிடம் 57 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்த சாதனையை முறியடித்தார்.  போட்டி குறித்து கூறிய கிமெட்டோ, போட்டி ஆரம்பித்தபோது என்னால் முடியும் என்று நான் கருதினேன்.  வெற்றி பெற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கென்யா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள எல்டோரெட் நகரில் ரிப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர் கிமெட்டோ.  இந்த பகுதி நீண்ட தூர ஓட்ட பந்தய வீரர்களை உருவாக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.  உலகின் சிறந்த பயிற்சி நகரமாகவும் இது திகழ்கிறது.  தனது 20-ஆவது வயதில் ஓட்ட பந்தய பயிற்சி பெறுவதற்கு முன்பாக விவசாயியாக இருந்தார்.

முதல் வெற்றி

அதன்பின் ஜாப்ரி முத்தாய் பயிற்சி குழுவில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார்.  பின் கடந்த 2011ம் ஆண்டு நைரோபியில் நடந்த அரை மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு முதல் வெற்றியை பெற்றார்.  பின்னர் 2012ம் ஆண்டில் பெர்லின் மராத்தான் போட்டியில் முத்தாய்க்கு அடுத்ததாக 2ம் இடத்தை பிடித்தார்.  தனது முதல் போட்டியிலேயே 2 மணி 04 நிமிடம் 16 வினாடி நேரத்தில் மிக வேகமாக பந்தய தூரத்தை கடந்து வரலாற்று சாதனைக்கு உரியவரானார் கிமெட்டோ.

அதன்பின் கடந்த 2013 வருடத்தில் டோக்கியோ மராத்தான் போட்டியை 2 மணி 06 நிமிடம் 50 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.  அதன்பின்னர் 2013ல் ந்டந்த சிகாகோ மராத்தான் போட்டியில் 2 மணி 03 நிமிடம் 45 வினாடிகளில் கடந்து சாதனை புரிந்ததுடன் இம்மானுவேல் முத்தாயை 2வது இடத்துக்கு தள்ளினார்.

இன்றைய போட்டியில் சக நாட்டு வீரர் இம்மானுவேல் முத்தாய் 2வது இடத்திற்கு வந்ததுடன் முந்தைய சாதனை நேரத்திற்கு உட்பட்டு 2 மணி 03 நிமிடம் 13 வினாடிகளில் வந்து கென்யா நாட்டின் திறமையை நிரூபித்தார்.  எத்தியோப்பியா நாட்டின் அபேரா குமார் 2 மணி 05 நிமிடம் 56 வினாடிகளில் வந்து  3வது இடத்தை பிடித்தார்.

பெண்கள் பிரிவு

பெண்கள் பிரிவில் எத்தியோப்பியா நாட்டின் திர்ப்பி செகாயே 2 மணி 20 நிமிடம் 18 நிமிடத்தில் வந்து முதல் இடத்தை பிடித்தார்.  2வது இடத்திற்கு வந்த பெய்சே தடேசே 2 மணி 20 நிமிடம் 27 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.  எனினும் கடந்த 2003ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் பவுலா ரேட்கிளிப் லண்டன் நகரில் 2 மணி 15 நிமிடம் 15 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக உள்ளது.

அமெரிக்காவின் ஷலேன் பிளாநகன் 2 மணி 21 நிமிடம் 14 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 3வதாக வந்துள்ளார்.  அவர் இதுவரை கலந்து கொண்ட மராத்தான் ஓட்ட பந்தய போட்டியில் மிக குறைந்த நேரத்தில் இந்த போட்டியில் வந்து  சாதனை புரிந்துள்ளார்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*