சற்றுமுன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண் டனை விதிக்கப்பட்டதால், முதல்– அமைச்சர் பதவியையும்,new-Gif எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். முதல்– அமைச்சரின் கூட்டுப் பொறுப்பில் அமைச்சரவை இடம் பெறுகிறது. எனவே, முதல்– அமைச்சர் பதவியை ஜெயலலிதா இழந்ததால் மந்திரிகளும் பதவியை இழக்கிறார்கள்.

எனவே, புதிய முதல்– அமைச்சர் மற்றும் புதிதாக அமைய உள்ள அமைச்சரவை பற்றி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்ய வேண்டும். இதற்கான எம்.எல்.ஏ.க்கள் அவசரக் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொடங்கியது.

இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் மைத்ரேயன், முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*