சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு

வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுர் new-Gifசிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

தனது 1991-96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், இன்று ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.

இந்தத் தகவலை சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங் சில ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

sasikala

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவித்ததில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் அதிக தொடர்பு இருப்பதாக சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டி இருந்தார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் எந்தெந்த வகைகளில் உதவியாக இருந்தனர் என்று சுப்பிரமணியசாமி தன் புகார் மனுவில் விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் நீதிபதி குன்ஹா தீர்ப்பு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*