ராஜபக்சவை ஐ.நா.மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, மீதான பொருளாதார தடை விதிக்க வேண்டும்:வேல்முருகன்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை ஐ.நா.மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது,  new-Gif

இலங்கை மீதான பொருளாதார தடை விதிக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் சேலத்தில் –

ராஜபக்சவை ஐ.நா.மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத்தமிழர்களிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், இலங்கை மீதான பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் வருகிற 24–ந் தேதி பேரணி நடக்கிறது.

ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தொடங்கி தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் பேரணி முடிவடைகிறது. இதில் 150–க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர், தமிழ் ஆதரவாளர்கள், மனித நேய பண்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச சட்டப்படி கச்சதீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் ராஜபக்சவுடன் கைகுலுக்கி நட்பு பாராட்டும் சுப்பிரமணியசாமி தமிழ்நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம்.

தமிழக மீனவர்களுக்கு எதிராக அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளும் சுப்பிரமணிய சுவாமியை பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*