பிரித்தானியர்களுக்கு உதவ புலிக்கொடிகளுடன் களத்தில் இறங்கிய ஈழத்தமிழர்கள்.

பிரித்தானியா சில மாதங்களாக தொடர்சியாக காலநிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 5,000 பிரித்தானிய இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன் நிலையில் பிரித்தானியா வாழ் ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்கியுள்ளார்கள். உலர் உணவுகள், உடுப்புகள், போர்வைகள் என பல உதவிகளை பிரித்தானியா வாழ் ஈழத் தமிழர்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) ஊடாக வழங்கியுள்ளார்கள்.

இவை அனைத்தும் பல மாவட்டங்களில் ஒன்றுசேர்க்கப்பட்டு, தற்போது வெள்ள நிவாரண மையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் தமிழர்கள் தந்த பொருட்களை வானில் ஏற்றி அதில் தேசிய கொடியை பறக்கவிட்ட வண்ணம் மிடுக்குடன் சென்று உதவிப் பொருட்களை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று சொல்லி தடைசெய்து வைத்திருக்கும் பிரித்தானியாவில், அதன் அரசாங்கமே வெட்கிபோகும் அளவுக்கு இது நடைபெற்றுள்ளது. புலிகளுக்கு ஆதரவளிக்கும் அதே மக்கள் இன்று பிரித்தானியர்களுக்கும் உதவியுள்ளார்கள் என்ற செய்தி அரசுக்கு ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகளைப் போல பார்பதும், கடும்போக்காளர்கள் என்று சித்தரிப்பதும் மேற்குலகின் வழக்கமாக இருக்கிறது. ஆனால் இன்று ஈழத் தமிழர்கள் பிற இனத்தவர்களுக்கு செய்திருக்கும் உதவிகள், மற்றும் ஏனைய இனங்களோடு ஒத்து வாழும் பழக்கங்களை கொண்டுள்ளார்கள் என்பதனை மீண்டு ஒருமுறை நிரூபித்துள்ளார்கள். இதுவரை பிரித்தானியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா , ஐ.நா போன்ற அமைப்புக்களே உதவிவுள்ளார்கள். அதற்கு இணையாக இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது ஈழத் தமிழர்கள் இவ்விடையத்தில் தமது உதவிகளை பிரித்தானியர்களுக்கு வழங்கியுள்ளமை தமிழர்களை பெருமைப்படவைக்கும் விடையமாக அமைந்துள்ளது.

பிரித்தானியாவிலிருந்து  ஈழத்து  உறவு …….Eelamranjan Eelamranjans

01 eelam

03 Eelam

04 Eelam