எட்டு வயது சிறுமி மூன்று பிள்ளைகளின் தந்தையான அயலவரொருவரால் பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மூன்று பிள்ளைகளின் தந்தையான new-Gifஅயலவரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்குக் கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார்.

இதன்போது அந்தநபருக்கு குடையொன்றை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியையும் கூடவே அனுப்பியதுடன் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு குடையை எடுத்து வருமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி நெடுநேரம் ஆகியும் வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும், அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. பொலிஸார் குறித்த சந்தேக நபரின் சகோதரியின் வீட்டை உடைந்து பார்த்த போது பை ஒன்றில் சிறுமியின் கை,கால் மற்றும் வாய் கட்டப்பட்டு கட்டிலுக்கு கிழே மயக்கமான நிலையில் போடப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

உடனடியாக சிறுமி காத்தான்குடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது உயிரிழந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை காத்தான்குடி பொலிஸார் இன்று அதிகாலை செங்கலடி பதுளை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்

பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராக வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பு நீதிமன்றம் முன்பாக இன்று நண்பகல் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*