பருத்தித்துறை கடற்பரப்பில் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் வடக்கே, பருத்தித்துறை கடற்பரப்பில் 70 அடிக்கும் அதிக நீளமுடைய மிகப்பெரிய new-Gifஇந்திய மீனவர் படகொன்றைக் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதிலிருந்த இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களையும் வியாழனன்று கைது செய்திருக்கின்றனர்.

பருத்தித்துறை மற்றும் தலைமன்னார் கடற்பிரதேசத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 55 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்கள் வந்த ஏழு மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்ட 30 மீனவர்களையும் வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை கடற்டையினர் யாழ்மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் வியாழனன்று காலை கையளித்திருந்தனர். இவர்களை செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 70அடிக்கும் அதிக நீளமுள்ள மீன்பிடி படகொன்றை இலங்கைக் கடற்படையினரும், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் இப்போதுதான் முதற்தடவையாகக் கண்டிருப்பதாக யாழ்மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி  கூறினார்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*