கத்தி படத்தில் நடித்து வரும் விஜய் அதன்பிறகு தனுஷ் தயாரிக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பார்என எதிர்பாா்க்கப்படுகின்றது

நடிகராக இருந்த தனுஷ் ‘எதிர்நீச்சல்’ படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் new-Gifசிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இப்படம் கணிசமான வசூலைத் தந்தது. இப்படத்தையடுத்து தனுஷ் ஹீரோவாக நடித்து வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தயாரித்தார். இப்படம் அதிக வசூலை வாரிக்கொடுத்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது இவர் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்னும் படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தை ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியை அடுத்து விஜய்யை வைத்து பட தயாரிக்க தனுஷ் ஆசைப்படுவதாக தகவல் வந்துள்ளது.

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகு தனுஷ் தயாரிக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பார் என கூறப்படுகிறது.

விஜய்க்கும் தனுஷுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இவர்கள் கூட்டணியில் விரைவில் சூப்பர் ஹிட் படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*