1990.09.09 அன்று கொல்லப்பட்டவர்களின் 24 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்க தடை

இறந்தவர்களின் நினைவு தினத்தை கொண்டாடுவதற்கு பொலிஸார் தடைவிதித்த நிலையில்new-Gif தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டக்களப்பு பொலிஸாருக்குமிடையே வாய்தர்க்கம் ஏற்படடுள்ளது.
மட்டக்களப்பு சத்துருக்கொன்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் 1990.09.09 அன்று கொல்லப்பட்டவர்களின் 24 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்க ஏற்பாடாகியிருந்தது.
இந்நிலையில் கொக்குவிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு உறவினர்கள் சகிதம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தச் சென்றபோது பொலிசார் தடுக்கவே முறுகல் நிலை ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றினால் பொதுமக்கள் கூடும் இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்nறும்போது மக்களிற்கும் அண்டிய சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படாது தடுக்கவே இத்தடை விதிக்கட்டுள்ளது என பொலிசார் நீதி மன்ற உத்தரவை வாசித்துக் காட்டினர்.
அப்போது நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலயத்தில் நாங்கள் சுடர் ஏற்றுவோம் உங்களால் தடுக்கமுடியாது எனத் தெரிவித்து சத்துருக்கொண்டான் வீரமகா காளியம்மன் ஆலயத்தில் 24 ஆண்டுகளை நினைவு கூர்ந்து 24 விளக்குகளை ஏற்றி மௌன அஞ்சலி தெரிவித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா. அரியநேந்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோரும் மற்றும் குறிப்பிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த தினத்தில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள், தாய்மார்கள், வயோதிபர்கள் என 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களின் நினைவுதினம் ஒவ்வோரு வருடமும் அதே தினத்தில் நினைவு கூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*