அல்-கொய்தா அமைப்பின் பிரிவை இந்திய துணைக்கண்டத்திலும் அமைக்க போவதாக அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல்

அல்-கொய்தா அமைப்பின் பிரிவை இந்திய துணைக்கண்டத்திலும் அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் –new-Gifஅல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல்-கொய்தா ஆதரவு பயங்கரவாதியான, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈராக்,சிரியா ஆகிய நாடுகளில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்தும், பதிலடி கொடுக்க ஜேம்ஸ் போலே, ஸ்டீபன் சாட்லாப் ஆகிய இரண்டு அமெரிக்க பத்திரிகையாளர்களை கொடூரமாக தலையை துண்டித்து கொன்றதுடன் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அல்-கொய்தா அமைப்பின் தலைவராக உள்ளவர் அய்மன் அல்- ஜவாகிரி. பின்லாடனின் வலது கரமானானவர். பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசமாபின்லாடன் அமெரிக்க படைகளால் கடந்த 2011ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அந்த அமைப்பின் தலைவராக இவர், செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜவாகிரி பேச்சின் வீடியோ வெளியானது. 55 நிமிடங்களை கொண்ட அந்த வீடியோவில் ஜவாகிரி பேசியதாவது,
ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட எங்கள் அமைப்பினை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம். தவிர பர்மா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் , இந்தியாவில் அசாம், குஜராத் , காஷ்மீர் ஆகிய இடங்களிலும் கிளையை நிறுவுவோம். ஏற்கெனவே பாகிஸ்தானில் உள்ள அல்-கொய்தா பிரிவிற்கு ஆசிம் உமர் தலைவராக உள்ளார்.

அதே போன்று, இந்திய துணைக்கண்டத்தில் கொய்தா -அல்-ஜிகாதி என்ற பெயரில் பிரிவை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*