வம்பு நடிகா் காதல் பிரேக் அப் ஆனதால் தனது காதலை எப்படியாவது தொடரவேண்டும் என சின்னக்குஷ்பு நடிகைக்கு தூது மேல் தூது விட்டுக்கொண்டு இருக்கின்றாராம்.

வம்பு நடிகருக்கும், சின்னக்குஷ்பு நடிகைக்கும் காதல் பிரேக் அப் ஆனதால் வம்பு நடிகர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்துnew-Gif மீளவில்லையாம். மீண்டும் தனது காதலை எப்படியாவது தொடரவேண்டும் என தூது மேல் தூது விட்டுக்கொண்டு இருக்கின்றாராம்.

ஆனால் சின்னக்குஷ்பு நடிகைக்கு தூது வந்தவர்களிடம் இனி மீண்டும் காதல் தொடர வாய்ப்பே இல்லை என்று கூறி மறுத்துவிட்டாராம். இறுதியில் இருவருக்கும் நெருக்கமான ஒருவர் சின்னக்குஷ்புவிடம் தூது சென்றுள்ளார்.

அவரிடம் நீண்ட நேரம் மனம்விட்டு பேசிய நடிகை, வம்பு நடிகர் செய்த அனைத்து தவறுகளையும் மறந்துவிட்டேன். ஆனால் பிரேக் அப் சமயத்தில் அவர் சொன்ன இரண்டு வார்த்தைகளை தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இப்படிப்பட்ட கேவலமான வார்த்தை கூறியவருடன் எப்படி மீண்டும் ஒன்றுசேர முடியும் என்று சொல்லியதோடு அந்த இரண்டு வார்த்தையையும் அவரிடம் கூறினார்.

அந்த வார்த்தைகளை கேட்ட தூது வந்தவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம். இனி மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். எனவே மீண்டும் காதலை தொடர வம்பு நடிகர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*