ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்:இலங்கைப் பேராயர்கள்

ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கைப் பேராயர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.new-Gif

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈராக்கிய கத்தோலிக்கர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து இலங்கை பேராயர்கள் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கையெழுத்திட்டு வெளியிடப்பட்ட குறித்த கண்டன அறிக்கையில் ஈராக்கில் அப்பாவி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதை, சர்வதேச சமூகம் தலையிட்டு நிறுத்தவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு விரோதமாக செயற்பட்டு வரும் இவ்வாறானவர்களின் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக குறித்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொள்ளப்படும் தொடர் தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருவதோடு அண்மையில் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*