இரும்புக் கம்பிகளால் சீமானின் அடியாட்கள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் நடந்தது என்ன?

ஜனநாயக ரீதியாக குரல் எழுப்பிய மாணவர்களை இலக்குவைத்து தயாராக வைத்திருந்த இரும்புக் கம்பிகளால் சீமானின் new-Gifஅடியாட்கள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில்  மாணவர்களுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை, கால்களிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமலேயே, ஜாம் பஜாரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் காவலர்கள்.

பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரிக்கும் “புலிப்பார்வை” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தாலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ பங்கேற்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து. எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் மற்றும் வேந்தர் மூவீஸ் உரிமையாளர். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இவர்தான். விழா நடந்து கொண்டிருக்கும் போதே, மாணவர்கள் சீமானை எதிர்த்து கோஸம் எழுப்பினர். தங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்த சீமானை கைது செய்யுங்கள் என்றும் கோஸம் எழுப்பினர்.

உடனே, இரும்புக் கம்பிகளுடன் தயாராக இருந்த நாம் தமிழர் கட்சியினர் ஓடிச் சென்று கேள்வி கேட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த செம்பியன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அரங்கில் இவ்வளவு கைகலப்பு நடந்தும், மேடையில் அமர்ந்திருந்த சீமான் உட்பட்டவர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாதுகாப்புக்காக சென்றிருந்த பொலீசார் தலையிட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்த மாணவர்களை கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்காமலேயே ஜாம்பஜார் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாணவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

download

download-1

download-2

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*