ஊடகங்களை கண்டு ஓடி ஒழியும் அனன்யா…!!

நடிப்புக்குமுழுக்கு போடுகிறீர்களா என்றதற்கு பதில் அளித்தார் அனன்யா. நடிகை அனன்யாகூறியதாவது: நிறைய படங்களில்new-Gif நடிக்காதது ஏன் என்கிறார்கள். அப்படி இல்லை.பிடித்த வேடங்கள் மட்டுமே ஏற்கிறேன்.

நான் நடித்த சில படங்கள் இன்னும்வெளியாகாமல் உள்ளது. மலையாளத்தில் ஒன்றிரண்டு படங்களில் நான் சொந்த குரலில்பாடியும் இருக்கிறேன். ஆனால் நடிப்பை விட்டுவிட்டு பாடகியாகும் எண்ணம்இல்லை. மலையாளத்தில் பாசிடிவ் என்ற படத்தில் நடித்தேன்.

தமிழில்நான் நடித்த நாடோடிகள் ஹிட் ஆனது. தமிழை பொறுத்தவரை தேர்வு செய்தேபடங்களில் ஒப்புக்கொள்கிறேன். அதனால் அப்படங்கள் எனக்கு வெற்றி படங்களாகஅமைந்தன. ஆனால் மலையாளத்தில் வந்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டதால் எனக்குதோல்வி படங்களாக அமைந்தன. இப்போது அதிலிருந்து விழித்துக்கொண்டேன்.நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத்தான் மலையாளத்தில் இப்போதுதேர்வு செய்கிறேன்.

எனது திருமணம் பற்றி பல்வேறு செய்திகள்வெளியாகின. அவை என்னை பாதித்தது. யாராக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில்மற்றவர்கள் தலையீடு இருக்கக்கூடாது என்று எண்ணுகிறேன். அப்படி இருந்தால்அது தொந்தரவாகத்தான் அமைகிறது. எனவேதான் நான் மீடியாவிலிருந்து ஒதுங்கிஇருக்கிறேன். மற்றபடி வேறு எந்த காரணத்துக்காகவும் நான் ஒதுங்கிஇருக்கவில்லை.

 

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*