சீமானின் நடவடிக்கையினால் அதிர்ச்சியில் ஈழம் மாணவர்கள்

விஜய்யின் கத்தி படத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் சமீபத்தில் கத்தி படத்துக்காக ஏ. ஆர் முருகதாஸ் சீமான், நெடுமாறன் போன்றவர்களைnew-Gif சந்தித்து பேசினார் என்ற தகவல் வெளியானது.

இதுநாள் வரை கத்தி படத்தை பற்றி வாய் திறக்காமல் இருந்த சீமான் தற்போது என்ன நடந்ததோ தெரியவில்லை கத்தி படத்துக்கு ஆதரவு கை நிட்டியுள்ளார், இவர் மட்டும் இல்லாமல் இயக்குனர் விக்ரமன் கூட ஆதரவு தெரிவித்து உள்ளாராம்.

இதற்கு பின்னணியில் ஒரு கதை சொல்ல படுகிறது, அதாவது சீமானின் நீண்ட நாள் கனவு படமான பகலவன் படத்தின் கதையை கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பே விஜய் மற்றும் ஜெயம்ரவிடமும் சொல்லியுள்ளார் .ஆனால் படம் தொடங்கிய பாடு இல்லை.

இந்நிலையில் தற்போது சிம்புவை வைத்து இப் படத்தை எடுக்க போகிறாராம் அதுவும் கத்தி படத்தின் லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க உள்ளது என்ற செய்தி வந்து உள்ளது. இந்த படம் தொடங்குவதற்கு ஏ. ஆர் முருகதாஸ் மிகவும் உறுதுணையாக இருந்து இருக்கிறார். இந்த ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதால் இதை அறிந்த சில ஈழம் மாணவர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். .

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*