சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவன் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்:மாணவியரை வன்புணர்வுக்குள்ளாக்குவோம் என்றும் எச்சரிக்கை

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு தமிழ் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 2 new-Gifமணியளவில் தமிழ் மாணவன் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் விடுதியின் கழிவறையில் இனவாத ரீதியான வாசகங்கள் சிலவற்றை எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதுடன் அதில் மொழிப்பிழைகளும் காணப்படுகின்றன.
இது எங்கள் நாடு, நீங்கள் போய்விடுங்கள், நீங்கள் புலிகள் போன்ற வார்த்தைகள் அவற்றில் எழுதப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் முகமா லையைச் சேர்ந்த சந்திர குமார் சுதர்சன் (வயது 21) என்ற புதுமுக மாணவனே நெஞ்சுப் பகுதி, முதுகுப் பகுதி ஆகியவற்றில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெரும்பான்மையின மாணவர்களாலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிப்பதாக அங்குள்ள சக மாணவர்கள் கூறுகின்றனர். சப்ரகமுவ பல்கலைக்கழ கத்தில் கலைப் பிரிவின் கீழான சமூக விஞ்ஞான கற்கைநெறி,
ஆறு மாத காலத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதில் போதியளவு மாணவர்களை இணைப்பதற்கு இடமில்லை எனத் தெரிவித்து கற்கை நெறி இரு பிரிவுகளாக்கப்பட்டது. முதல் பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் முடிந்தபோதும், இரண்டாவது பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாதிருந்தது.
அதையடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது பிரிவு மாணவர்களின் கற்கைநெறியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது பிரிவில் 20 தமிழ் மாணவ, மாணவியர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.
சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தில் ஒரே தடவையில் அதிகளவான தமிழ் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமை இதுவே முதல்முறை. இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி, பண்டாரா விடுதியில், புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 20 தமிழ் மாணவ, மாணவியரின் பெயர் குறிப்பிட்டு எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப் பட்டிருந்தது.
அதில் மாணவர்கள் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறாவிட்டால் வெட்டிக் கொல்லப்படுவர் என்றும், மாணவியரை வன்புணர்வுக்குள்ளாக்குவோம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கொச்சைத் தமிழிலும், சிங்களமும் கலந்து எழுதப்பட்ட துண்டுப் பிரசுரம் விடுதியில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது. குறித்த விடுதிக்கு பாதுகாப்புக்கு விசேட ஊழியர் நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் நிர்வாகத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் கடந்த சனிக்கிழமையும் அவ்வாறான துண்டுப்பிரசுரம் ஒப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று அதி காலை 2 மணியளவில், எச்சரிக்கை விடுக்கப்பட்ட 20 மாணவர்களுள் ஒருவரான சுதர்சன், இயற்கை கடன் கழிப்பதற்காக விடுதியை விட்டு வெளியே வந்தபோது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதன் போது அங்கு நின்ற முகமூடி அணிந்த சில மாணவர்கள் சுதர்சனை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
நெஞ்சுப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் கத்தியால் வெட்டியுள்ளனர். “துண்டுபிரசுரம் ஒட்டிக் கொண்டிருந்த சிலரே தாக்குதல் நடத்தினர். அவர்கள் முகத்தில் மப்ளர் அணிந்திருந்தனர். தாக்கிபின்னர் கழுத்தை இறுக்கிக் கட்டினர். பின்னர் மயக்கமாகிவிட்டேன். தாக்குதல் நடத்தியவர்கள் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட தோற்றத்தை கொண்டவர்கள்.
அவர்களில் ஒருவர் உடலில் பச்சை குத்தியிருந்தார். அவர்களைத் என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்று தாக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
தாக்குலுக்கு இலக்கான சுதர்சன் அரை மணித்தியாலத்தின் பின்னர் மயக்கம் தெளிந்து தவழ்ந்து சென்று தனது நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்தே பலாங்கொட மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவருகின்றது.
இந்தத் தாக்குதல் விடுதியில் பாதுகாப்பு ஊழியர் இருக் கத்தக்கதாவே நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
அதேவேளை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோது தனிச் சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்கு மூலத்திலேயே தம்மிடம் கையெழுத்துப் பெறப்பட்டது என்று தெரிவித்துள்ள துண்டுப்பிரசுரம் மூலம் அச்சுறுத் தப்பட்ட தமிழ் மாணவர்கள், அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறித்து தமக்கு எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
தாம் முறைப்பாடு செய்த சமயம், இந்த அச்சுறுத்தலை நீங்களே திட்டமிட்டு நடத்தியுள்ளீர்கள். வேறு பல்கலைக் கழகத்துக்கு மாறுவதற்காகவே இவ்வாறு செய்துள்ளீர்கள் என்று பொலிஸார் கூறினர் என்றும் அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
sabrakamuwa_student_006
20140712_0757141
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*