பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நேற்று உலக அளவில் சுமார் அரை மணி நேரத்துக்கு முடங்கியது.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நேற்று உலக அளவில் சுமார் அரை மணி நேரத்துக்கு முடங்கியது.new-Gif
இந்திய நேரப்படி இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஏற்பட்ட பேஸ்புக் சேவை பாதிப்பின் எதிரொலியாக மற்றொரு சமூக வலைத்தளமான ட்விட்டரை நோக்கி இணையவாசிகள் படையெடுத்தனர்.
பேஸ்புக் தளத்தில் சர்வரில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் ‘மன்னிக்கவும் சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்ற தகவலை மட்டும் பேஸ்புக் வெளியிட்டது.
உலக அளவில் இணையதளம் மட்டுமின்றி ஆப்-களிலும் மொபைலிலும் இந்த முடக்க பாதிப்பு ஏற்பட்டது.
பேஸ்புக் தளம் முடங்கிய அடுத்த நொடிகளில் அதுகுறித்த தகவலை ட்விட்டரில் இணையவாசிகள் பகிர்ந்தவண்ணம் இருந்தனர்.
அதன்பின் சுமார் அரை மணி நேரத்தில் பேஸ்புக் வழமை போல் இயங்கத் தொடங்கியது. அதுகுறித்த மகிழ்ச்சியையும் அனுபவத்தையும் பயனாளிகள் பலர் ஸ்டேட்டஸாகவே இடத் தொடங்கினர்.
மேலும் முன்னதாக கடந்த ஜூன் 19-ம் திகதியும் இதேபோல் பேஸ்புக் அரை மணி நேரம் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*