மரண அறிவித்தல் – திரு தம்பையா சிவராசா (ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்,புதுக்குடியிருப்பு)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிவராசா அவர்கள் 24-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கார்த்திகாயினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கோடீஸ்வரன்(இலங்கை), சிங்கேஸ்வரன்(கனடா), இலங்கேஸ்வரன்(பிரான்ஸ்), குகனேஸ்வரன்(பிரான்ஸ்), ஜெயந்தினி(சுவிஸ்), குமுதினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சிவபாக்கியம், மற்றும் தம்பிராசா, காலஞ்சென்ற கேசரி, காத்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமதி, ஞானச்செல்வி, கோமளா, கோகிலவாணி, பரந்தாமன், காந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதாசிவம், சிவஞானம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசாந், பத்சலன், பானுகோபன், நேவிதன், இலக்கியா, செங்கீரன், பரணிதா, கானிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று வள்ளிபுனத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*