யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று காலை ரு குழுக்களுக்கிடையில் மோதல்

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இரண்டாம் வருடnew-Gif மாணவர்களுக்கும் கடந்த ஒரு சில மாதங்களாக இருந்து வந்த கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியதில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டாம் வருடத்தில் கல்வி கற்ற மூன்று மாணவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வவுனியா வைத்தியசாலையில் வவுனியா வளாக மாணவர்கள் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிசார் மாணவர்களிடையே சமரசத்தை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

dfdfdffdfddfdf

vavuniya_4

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*