சுவிஸ் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் லெப்: கேணல். விக்ரர் ( ஒஸ்கா ) சுற்றுக்கிண்ணத்தை 2014ல் தனதாக்கிக் கொண்டது.

பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளன ஆதரவுடன், தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 11 வது தடவையாக நடாத்திய லெப். கேணல். விக்ரர் ( ஒஸ்கா) நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டம்.

பிரான்சின்  சார்சல் மாநரத்தில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா மைதானத்தில் 27.07.2014 காலை 10.00 மணிக்கு தமிழ்ச்சோலை மாணவ மாணவியரின் முழவு வாத்திய இசையுடன் விருந்தினர்கள், கழகங்களின் பொறுப்பாளர்கள் அழைத்து வரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றலுடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உதவிப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றி வைக்க பிரெஞ்சு தேசியக்கொடியினை சார்சல் தமிழ்ச்சங்கத்தலைவரும், பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியக உதவி தலைவருமாகிய திரு.டக்லஸ் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடி தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாவீரர் லெப். கேணல் திருவுருவப்படத்திற்கும், மாவீரர் நினைவு சின்னப்படத்திற்கும் 19.09.1989ல் மாங்குளம் பகுதியில் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரமரணத்தை தழுவிய கப்டன் வண்ணன் அவர்களுடைய சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க, மலர் வணக்கத்தை 2006ல் மன்னார் பகுதியில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட மேஐர். வன்னியன் அவர்களின் சகோதரர் செய்திருந்தார்.

ஆசிய நாட்டில் இருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்து சிறப்பித்த அனைத்து வீரர்களும் தமிழர்கள் சிறந்த தமிழ் உதைபந்தாட்ட வீரர்கள் என்ற பெருமையையும் பெரிமிதத்தை கொள்வதோடு இது தமிழ் இனத்திற்கும் அவர்களின் விடுதலைக்கும் போராட்டத்திற்கும் பலம் சேர்க்கும் சேர்க்க வேண்டும்.

குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகம் மூன்றாம் இடத்தை  பெற்றுக்கொண்டது.
இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும், பதக்கங்களையும், திரு. யக்கி , சார்சல் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. டக்லஸ் அவர்களும் வழங்கினா்.

நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும், பதக்கத்தையும் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமரன் அவர்களும், தமிழர் உதைபந்தாட்ட மெய்வல்லுனர் போட்டி முகாமையாளர் திரு. இராஐலிங்கம் அவர்களும் வழங்கி மதிப்பளித்தனா்.

முதலாம் இடத்தை யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் – சுவிஸ் பெற்றுக்கொண்டது.
இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும்,பரிசினையும் திரு. சார்ல்ஸ் தேவசகாயம் அவர்கள் வழங்க வீரர்களுக்கான பதக்கங்களை தமிழர் விளையாட்டுத்துறை உதவிப்பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்களும், ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளன தலைவர் திரு. சங்கரராஜா அவர்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இப்போட்டியில் சிறந்த வீரர்களாக

கஜிஸ் (நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழம்).

பிரதீப் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் – சுவிஸ் ).

இப்போட்டியின் ஆட்டநாயகனாக

யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகவீரர் தெரிவு செய்யப்பட்டார்.

இப்போட்டியில் பின்வரும் நாடுகள் பங்கு பற்றியிருந்தன.

தாய்மண் விளையாட்டுக்கழகம் – சுவிஸ்

பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம்- பிரான்ஸ்

யங்ஸ்ரார் ( இளைய நட்சத்திரம் ) சுவிசு

குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகம்- பிரான்ஸ்

தமிழர் விளையாட்டுக்கழகம் – மலேசியா

சென்பற்றிக்ஸ் விளையாட்டுக்கழகம் – பிரான்ஸ்

தமிழர் விளையாட்டுக்கழகம் – நெதர்லாந்து

தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 – பிரான்ஸ்

நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழம் – பிரான்ஸ்

ஈழவர் விளையாட்டுக்கழகம்- பிரான்ஸ்

உதயசூரியன் – விளையாட்டுக்கழகம் – பிரான்ஸ்

நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக்கழம் – பிரான்ஸ்

 

. 5512 5572 5571 5511 5523

5516 5582

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*