தெலுங்கில் புதுப் படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசன் அவ்வளவு ஆர்வம் இல்லை

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப் படங்களை விட தெலுங்கப் படங்கள்தான் ஒரு மார்க்கெட் அந்தஸ்தைக் கொடுத்தன.  new-Gif
தமிழில் அவர் நடித்த “3”, “7ம் அறிவு” ஆகிய படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஆனால், தெலுங்கில் அவர் நடித்த “கப்பார் சிங்” படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தொடர்ச்சியாக நல்ல வெற்றியையும், தெலுங்கத் திரையுலகில் முன்னணி நடிகை என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தன.

சமீபத்தில் வெளிவந்த “ரேஸ் குர்ரம்” படம் வரை ஸ்ருதியின் தெலுங்கு மார்க்கெட் ஸ்டடியாகவே உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக தெலுங்கில் புதுப் படங்களில் நடிக்க ஸ்ருதிஹாசன் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம்.

தற்போது மகேஷ் பாபுவுடன் ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

அதே சமயம் தமிழில் விஷாலுடன் “பூஜை” படத்தில் நடித்து வருகிறார்.,

விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அதோடு நான்கைந்து ஹிந்திப் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

தமிழில் பெரிய ஹீரோக்களுடன் படங்களில் நடிக்க ஒப்பந்தமானதும், அவர் தெலுங்குத் திரையுலகை கண்டு கொள்ளவில்லை என அங்குள்ளவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்களாம்.

ஆனாலும், ஸ்ருதிஹாசன் தமிழ்த் திரையுலகிலும் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்க ஆர்வமாக உள்ளார் என இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*