மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகள் போல மீண்டெழுந்து போராடுகின்ற தமிழ் மக்கள்:ஹஸன் அலி

முஸ்லிம் இனம் அழிந்துகொண்டு இருக்கின்றது. தமிழ் மக்கள் அழிந்தாலும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகள்    new-Gifபோல மீண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களிடமுள்ள போராட்டக் குணத்திற்குத் தலை வணங்குகின்றோம். முஸ்லிம் தலைமைகள் தங்களிடமுள்ள நப்பாசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைக் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினார். கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ததினூடாக வரலாறு காணாத வெற்றியாக மாகாண சபையில் 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டோம்.

அந்தப் போராட்டக் குணம் எங்களிடம் இல்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி இன்று ஞாயிற்றுக்கிழமை (20.07.14) தெரிவித்தார். வலுவான ஐக்கியத்தினை நோக்கி என்ற தொனிப்பொருளின் கீழ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34ஆவது மாநாடு சனிக்கிழமை (19.07.14) முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்று நாட்டில் 300இற்கும் மேற்பட்ட இனவாத ரீதியிலான வன்முறைகள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. இவற்றிலிருந்து எமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளும் நிலையில் நாம் இன்று உள்ளோம். தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் போது, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கான தீர்வும் கிடைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைக்கும் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (20.07.14) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*