இ.போ.ச சொந்தமான பேருந்து கொழும்பு பிரதான வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவாயவிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற இலங்கை    new-Gif போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து கொழும்பு பிரதான வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று காலை இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் பேருந்தில் பயணித்த பயணிகள் எவ்வித பாதிப்புமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஹப்புத்தளை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

.bus_fire_colombo_005 copy

bus_fire_colombo_002 copy

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*